Also Watch
Read this
By: Web Team

கள்ளக்குறிச்சி அருகே ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையின் போது சாலை அமைக்கவில்லை எனக் கேள்வி கேட்ட இளைஞரை, திமுக மாவட்ட செயலாளரும், சங்கராபுரம் எம்எல்ஏ-வுமான உதயசூரியன் தகாத வார்த்தைகளால் திட்டிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொட்டியம் பகுதியில் உறுப்பினர் சேர்க்கைக்கு சென்ற எம்.எல்.ஏவிடம், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என்றும், உறுப்பினர் சேர்க்கைக்கு மட்டும் வந்துள்ளீர்கள் எனவும், இளைஞர் ஒருவர் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த எம்எல்ஏ உதயசூரியன் கடுமையாக திட்டியதாக சொல்லப்படுகிறது.