Also Watch
Read this
Posted on: Feb 15, 2026 12:36 PM
By: Fyrose Banu

உடுமலை அருகே மகா சிவராத்திரியை முன்னிட்டு திருச்சப்பர சிறப்பு பூஜை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
அமணலிங்கேஸ்வரர் கோயில் திருச்சப்பர பூஜை
உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலையில், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது.
மகா சிவராத்திரி விழா கோலாகலம்
இந்த கோயிலில் ஆண்டுதோறும், மகா சிவராத்திரி விழா வெகு சிறப்பாக நடந்து வருகிறது. இந்தாண்டு மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு இன்று முன்னோர்கள் அறிவுரையின் பேரில் பூலாங்கிணர் கிராமத்தில் பாரம்பரிய முறையில் திருச்சப்பரம் தயார் செய்யப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடந்தன.
திருச்சப்பர ஊர்வலம்
பின்னர் பூலாங்கிணர், ராகல்பாவி, ஆர்.வேலூர் கிருஷ்ணாபுரம், வாளவாடி வழியாகத் திருச்சப்பர ஊர்வலம் நடைப்பெற்றது. கிராம மக்கள், வேளாண் வளம் செழிக்க, தானியங்கள், பழவகைகள், விவசாய விளை பொருட்கள் வீசியும், மண்டக படி அமைத்துச் சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர்.
யாகப் பூஜை, அபிஷேகம், தீபாராதனை
வளாவாடியில் நடைபெற்ற திருசப்பர சிறப்பு பூஜையில் சுமார் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடி சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். பின்னர் திருமூர்த்திமலைக்கு திருச்சப்பரம் சென்ற நிலையில் சிறப்புப் பூஜை முதல் கால யாகப் பூஜை, அபிஷேகம், தீபாராதனை நடைப்பெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved