Also Watch
Read this
By: Web Team

காலாண்டு விடுமுறை மற்றும் ஆயுத பூஜை என தொடர் விடுமுறையால், கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் கவியருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
அருவியில் நீர்வரத்து குறைந்துள்ள நிலையில், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால், காத்திருந்து குளிக்கும் நிலை ஏற்பட்டது. ஆழியார் அணை சிறுவர் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.