Also Watch
Read this
By: Web Team

2 நாட்கள் பயணமாக கோவை மற்றும் திருப்பூருக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சென்னையில் இருந்து கோவைக்கு விமானத்தில் சென்ற முதலமைச்சரை, அமைச்சர்கள் உள்பட திமுக நிர்வாகிகள் வரவேற்றனர்.
இதனை தொடர்ந்து,பொள்ளாச்சி-உடுமலை சாலை மார்க்கமாக உடுமலை சென்றடைந்த அவருக்கு வழிநெடுகிலும் தொண்டர்கள் காத்திருந்து வரவேற்பு அளித்தனர்.
கோவை மற்றும் திருப்பூரில் இன்று நடைபெறும் நிகழ்வில் பங்கேற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
இதனை தொடர்ந்து, பொள்ளாச்சி-உடுமலை சாலையில் உள்ள நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள, காமராசர் சிலை, முன்னாள் மத்திய அமைச்சர் சி.சுப்பிரமணியம், முன்னாள் எம்எல்ஏ பழனிசாமி, நா.மகாலிங்கம் உள்ளிட்டோரின் சிலைகளை அவர் திறந்து வைக்கிறார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved