Also Watch
Read this
By: Web Team

விழுப்புரம் மாவட்டம் சேதாரம்பட்டு பகுதியில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தி சென்ற இருவரை போலீசார் மடக்கி பிடித்தனர். கஞ்சா கடத்தல் குறித்து தகவல் அறிந்து புதுச்சேரி - மயிலம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், இருசக்கர வாகனம் ஒன்றை நிறுத்த முயன்றபோது, அவர்கள் நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது. போலீசார் விரட்டி சென்று பிடித்த போது தப்பி ஓடிய ஒருவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில், அவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா, இரண்டு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved