Also Watch
Read this
By: Manigandan Raja

பட்டாபிராம் அடுத்த பாலவேடு பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வழக்கம் போல் வாரச்சந்தை நடைபெற்று வந்தது. வார இறுதி நாள் என்பதால் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும், நகர்புறப் பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் காய்கறிகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவதற்காக சந்தையில் குவிந்திருந்தனர்.
சந்தைக்கு வந்த பொதுமக்கள் தங்களது இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை சந்தையின் அருகே உள்ள காலி மைதானத்தில் நிறுத்தியிருந்தனர். சந்தை நடைபெறும் மைதானத்தின் அருகே கார் கேரேஜ் செயல்பட்டு வருகிறது.
இங்கு பழுது நீக்க கார்கள் கடைக்கு உள்ளேயும் வெளியேயும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.இந்த சூழலில் திடீரென காரில் இருந்து புகை வந்துள்ளது. இதனை அணைப்பதற்குள் தீ பற்றி எரிய துவங்கி உள்ளது.கார்களின் டயர்கள் மூலமாக அருகில் இருந்த மற்றொரு காரும் தீக்கிரையானது.
உடனடியாக அங்கிருந்தவர்கள் காவல்துறைக்கும் தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.ஆவடி தீயணைப்பு நிலைய தீயணைப்பு வாகனங்கள் கோவில் திருவிழாக்கு சென்றதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக திருவொற்றியூர் மற்றும் திருவள்ளூரில் இருந்து ஒரு மணி நேரம் வாகனம் தாமதமாக வந்ததாக தெரியவருகிறது.அதற்குள் அங்கிருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை
கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
இருந்தபோதும் இந்த விபத்தில் கார்கள் முழுமையாக தீயில் கருகி சேதமடைந்தன.அதிர்ஷ்டவசமாக அங்கு யாரும் இல்லாததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டு உள்ளது. இச்சம்பவம் குறித்து திருநின்றவூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் சந்தையில் காய்கறிகள் சருகுகள் கொட்டப்பட்டு இருந்துள்ளது மேலும் கார்கள் முட்புதர்கள் உள்ளே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததும் சருகிகளில் வந்திருந்த பொதுமக்களில் யாரோ சிகரெட் பிடித்து அணைக்காமல் போட்டதால் தீ பற்றி கார்களில் பரவி உள்ளது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.