Also Watch
Read this
By: Manigandan Raja

சிறுத்தை உலா :
நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதியில் சமீப காலமாக சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது குறிப்பாக உணவு மற்றும் குடிநீர் தேடி குடியிருப்பு பகுதிகளில் சர்வ சாதாரணமாக உலா வருகிறது.
மேலும் குடியிருப்பில் புகுந்து வளர்ப்பு நாய்களை வேட்டையாடி செல்வதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் குன்னூர் அருவங்காடு அருகே உள்ள ஜெகதளா கிராமத்தில் அதிகாலை நேரத்தில் இரண்டு சிறுத்தைகள் கிராமத்தில் உலாவியது.
அங்குள்ள நீல மாரியம்மன் கோவில் அருகே நீண்ட நேரம் உலாவிய சிறுத்தைகள் அருகே உள்ள வனப்பகுதிக்குள் சென்றது இந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில்
பதிவாகியுள்ளது.
வனத்துறையினர் சிறுத்தையை கண்காணித்து கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved