Also Watch
Read this
By: Fyrose Banu

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு தாலுகாவில் போலி மருத்துவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு தாலுகா அயன்கரிசல்குளம் பகுதியில் போலியாக மருத்துவம் பார்ப்பதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது .


போலியாக மருத்துவம் பார்த்த வைரமுத்து
இந்தநிலையில் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா உத்தரவின் பேரில் இணை இயக்குனர் செந்தில் மற்றும் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் சென்று பார்த்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் வைரமுத்து (54) என்பவர் மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு போலியாக மருத்துவம் பார்த்து தெரிய வந்தது. 
போலி மருத்துவர் கைது
இதனை அடுத்து காவல்துறைக்கு கொடுத்த புகாரின் பேரில் நத்தம்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து வைரமுத்துவை கைது செய்து பின்பு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.