Also Watch
Read this
By: Web Team

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே பொறியியல் பட்டதாரியை 4 பேர் கொண்ட கும்பல் தாக்கிய வீடியோ வெளியாகி உள்ளது.
குளச்சல் அருகே உள்ள லியோன்நகர் பகுதியை சேர்ந்தவர் பெஜோ ஷாம்.
பொறியியல் பட்டதாரியான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கும் இடையே தேவாலய திருவிழா தொடர்பாக முன் இருந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சம்பவத்தன்று பெஜோ ஷாம் தேவாலயம் அருகே நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த 4 பேர் அவருடன் வாக்குவாதம் செய்து சரமாரியாக தாக்க தொடங்கினர்.
இதில் காயமடைந்த பெஜோ ஷாம் அளித்த புகாரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.