news-tamil-logo

3/14/2026, 11:03:37 PM

news-tamil-logo
more
Home districtnews ஓடும் ரயிலில் சிறுவன் பெண்களை தாக்கும் வீடியோ
tv

Also Watch

tv

Read this

ஓடும் ரயிலில் சிறுவன் பெண்களை தாக்கும் வீடியோ

வாணியம்பாடி, திருப்பத்தூர்

Posted on: Feb 22, 2026 11:16 AM

24

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tirupathur

சிறுவன் பெண்களை தாக்கும் வீடியோ  :

கர்நாடக மாநிலம் ராய்ச்சூரை சேர்ந்த பிரியங்கா என்பவர், தனது 17 வயது சம்ஹித் தெல்கர் என்பவருடன் திருப்பதி சென்று விட்டு, மீண்டும் ரயில் மூலம் ஊர் திருப்புவதற்காக திருப்பத்தியில் இருந்து காட்பாடியிற்கு வந்துள்ளனர் அப்போது.

சென்னையில், இருந்து மங்களூர் செல்லும் வெஸ்ட் கோஸ்ட் விரைவு ரயில், மூலம் ஜோலார்பேட்டை செல்வதற்காக, பெண்களுக்கான பெட்டியில் பிரியங்கா தனது 17 வயது சிறுவனுடன் ஏறியுள்ளார், அப்பொழுது ரயில் பெட்டியில் இருந்த பெண்கள், சிறுவனிடம் இது பெண்களுக்கான பெட்டி என பிரியங்காவிடம் தெரிவித்து வாக்குவாதம் செய்துள்ளனர்.

பின்னர் ரயில் புறப்பட்ட நிலையில், ரயில் திருப்பத்தூர் மாவட்டம் , வாணியம்பாடி ரயில் நிலையம் அருகே வந்துக்கொண்டிருந்த போது, அச்சிறுவன் ரயிலில் இருக்கையில் அமர்ந்திருந்த குழந்தையின் காலை மிதித்ததாக கூறப்படுகிறது, இதனால் , குழந்தையின் உறவினர்கள், அச்சிறுவனிடம், வாக்குவாதம் செய்துள்ளனர்.

இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறி மோதலாக மாறிய நிலையில், அச்சிறுவன் பெட்டியில் அமர்ந்திருந்த பெண்களிடம் வாக்குவாதம் செய்து, அவர்களை காலால் எட்டி உதைத்து தாக்கியுள்ளான்,இதனால் அலறிய ரயில் பயணிகள், ரயிலில் இருந்த அபாய சங்கிலியை இழுத்ததில், ரயில் வாணியம்பாடி கோவிந்தாபுரம் பகுதியில் நின்ற நிலையில், உடனடியாக சக பயணிகள், மற்றும் ரயிலில் இருந்த டிக்கெட் பரிசோதகர் அந்த சிறுவனை பிடித்து, ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

பின்னர் ரயில் அரை மணி நேரம் காலதாமதாக புறப்பட்டு சென்ற நிலையில், ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் பெண்களை தாக்கிய சிறுவன் மற்றும் சிறுவனின் தாய், பிரியங்கா மற்றும் சிறுவனிடம் தாகராறில் ஈடுப்பட்டவர்களிடம் தீவிர விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

மேலும் பெண்களுக்கான ரயில் பெட்டியில் தாயுடன் ஏறிய சிறுவன் , ரயில் பெட்டியில் பெண்களை தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

Related Link
திருப்பூரில் பேருந்து வராததால் பொதுமக்கள் சாலை மறியல்

திருப்பூரில் பேருந்து வராததால் பொதுமக்கள் சாலை மறியல்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரபல இயக்குநர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுவர்

0
7 hrs 9 mins agoshare
Allu cinemas








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved