Also Watch
Read this
By: Web Team

தூய்மை பணியாளர்களின் மாண்பினை நமது திராவிட மாடல் அரசு ஒருபோதும் விட்டுக் கொடுக்காது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தூய்மைப் பணியாளர்கள் நலன் காக்கும் வகையில் 6 சிறப்பு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவு:
நாளும் நம் நகரங்கள் இயங்க நள்ளிரவு, புயல், மழை, வெள்ளம் என எந்நேரமும் ஓயாமல் உழைக்கும் தூய்மைப் பணியாளர்களின் மாண்பினை நமது திராவிட மாடல் அரசு ஒருபோதும் விட்டுக்கொடுக்காது.
நான்கு ஆண்டுகளில் நாம் நிறைவேற்றியுள்ள பல நலத் திட்டங்களோடு, தூய்மை பணியாளர்களின் மற்ற நியாயமான கோரிக்கைகளையும் பரிசீலித்து...
தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு
குழந்தைகளுக்கு உயர்கல்வி ஊக்கத்தொகை
குடும்பத்தினருக்கு சுயதொழில் உதவி
தூய்மை பணியாளர்களின் நலவாழ்வுக்காக ரூ.10 லட்சம் காப்பீடு
தூய்மை பணியாளர்களுக்கு 30 ஆயிரம் வீடுகள்/குடியிருப்புகள்
பணியின்போது இறக்க நேரிட்டால் ரூ. 10 லட்சம் நிவாரண நிதி
தூய்மை பணியாளர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கண்டறிவதற்கும், சிகிச்சை அளிப்பதற்கும் தேவையான தனித்திட்டம் முதலிய புதிய நலத்திட்டங்களையும் செயல்படுத்தவுள்ளோம்
இது என்றும் உங்களுடன் உங்களுக்காக நிற்கும் எளியோரின் அரசு
இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved