Also Watch
Read this
By: Web Team

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே காட்டுப் பன்றிகளின் அட்டகாசத்தால் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோள பயிர்கள் சேதம் அடைந்ததாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். வடகரை, தென்கரை, நரிக்குளம், சிவலிங்காபுரம் உள்ளிட்ட கிராமங்களில் இரவில் வரும் காட்டுப்பன்றிகள் வயலில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியுள்ளது. ஏக்கர் ஒன்றுக்கு 40 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து நடவு செய்து நஷ்டம் அடைந்ததால் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், காட்டுபன்றிகளை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved