Also Watch
Read this
By: Web Team

நீங்க 40 வயதிலும் ரொம்ப அழகா,இளமையாக இருக்கலாம், எப்படீனு கேக்குறீங்களா..வாங்க இந்த பதிவுல பார்க்கலாம்
தற்போதைய கால கட்டத்தில பெரும்பாலோனோர் ஆசைப்படுவதே அழகா,இளமையா இருக்கனும்னுதான்.30 வயது கடந்தவுடனேயே நம்ம skin collagen level கம்மியாகி வயதான தோற்றம் மெதுமெதுவா தெரிய ஆரம்பிக்கும்.ஒவ்வொரு வயது கூடும்பொதும் skin collagen level 1சதவீதம் குறைவதா ஆய்வுகள் சொல்லுது.
இப்படியிருக்க இயற்கையான முறையிலேயே skin collagen அதிகபடுத்த கொலாஜன் நிறைந்த உணவுகள் சாப்பிட்டாலே போதும்.
வைட்டமின்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் அதிகம் உள்ள உணவை உட்கொள்வதன் மூலம் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
நீங்க non-vegetarian ஆ இருந்தா எலும்பு குழம்பு, மீன், முட்டை அதிகமா எடுத்துக்கும்போது சருமத்தின் காய்ந்த தன்மையை நீக்கி அழகா மாற்றுது.
chicken,mutton or beef ஓட எலும்பு கொலாஜனின் சிறந்த ஆதாரமாகக் கருதப்படுகிறது.
இதை அடிக்கடி soup வச்சி நீங்க சாப்பிடலாம்.
குறிப்பாக கொழுப்பு நிறைந்த மீன்களான சால்மன், டுனா போன்றவை ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் கொலாஜன் இரண்டையும் வழங்குகின்றன.
மேலும்,முட்டையின் வெள்ளைக்கருவில் புரோட்டின் அதிகம் இருக்கு, இது கொலாஜன் உற்பத்தியில் முக்கியமானதா இருக்கு.
ஒருவேளை நிங்க vegetarian இருந்தா தக்காளி, சிட்ரஸ் பழங்கள்,கீரைகள்,பருப்பு வகைகள அதிகளவு எடுத்துக்கும்போது skin collagen-அ அதிகபடுத்தி சருமத்தை இளமயாகவும்,அழகாகவும் வைத்துக்கொள்ள உதவுது.
சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை,திராட்சை போன்ற பழங்களில் வைட்டமின் சி அதிகம் உள்ளது, இது உடலின் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது.
மேலும் , பச்சை இலை காய்கறிகளான கீரைகளிலும்,தக்காளியிலும் ,ரெட் கேப்சிகம்-லயும் வைட்டமின் சி அதிக அளவு இருக்கு.
குறிப்பா பருப்பு வகைகளான பச்சை பயிறு, கொண்டைக்கடலை போன்றவையும் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கின்றன. அதுமட்டுமில்லாமல்
சருமத்தை இளமையாக வைத்துக்கொள்ள ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி போன்ற பெர்ரி வகைகளை உங்களுடைய உணவு முறையில் சேர்த்துக் கொள்ளலாம்.
இதில் நிறைந்துள்ள வைட்டமின் C மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் முதுமையை தாமதப்படுத்துகின்றன. இதனை உணவில் சேர்த்து வர சுருக்கங்கள் மற்றும் wrinkles வருவதை தடுக்கலாம்.
மேலும்,இளமையாக இருக்க நட்ஸ் மற்றும் விதைகள் தினமும் எடுத்துக்கொள்ளலாம். பாதாம், அக்ரூட் பருப்புகள், ஆளி விதைகள் மற்றும் பூசணி விதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. மேலும் இதில் காணப்படும் வைட்டமின் E, துத்தநாகம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கொலாஜன் உற்பத்திக்கு உதவுகின்றன.இவை சரும ஆரோக்கியத்திற்கு அதிக நன்மைகளை தருது.
அடுத்ததா நட்ஸ் மற்றும் விதைகள்
இவை சரும ஆரோக்கியத்திற்கு அதிக நன்மைகளை தருகின்றன. பாதாம், அக்ரூட் பருப்புகள், ஆளி விதைகள் மற்றும் பூசணி விதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. மேலும் இதில் காணப்படும் வைட்டமின் E, துத்தநாகம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கொலாஜன் உற்பத்திக்கு உதவுகின்றன.
இந்த உணவுகள் நீங்க அடிக்கடி உணவுல சேர்த்துக்கிட்டாலே போதும் நீங்க எந்த வயதிலயும் அழகாகவும்,இளமையாகவும் இருக்கலாம்.அதுமட்டுமிலாம உடல் ஆரோக்கியமாகவும் இருக்கலாம்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved