news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home health உங்கள் உடலுக்கு மெக்னீசியம் நிறைந்த உணவுகள் ஏன் தேவை ?எந்தந்த உணவில் இருக்கிறது..?
tv

Also Watch

tv

Read this

உங்கள் உடலுக்கு மெக்னீசியம் நிறைந்த உணவுகள் ஏன் தேவை ?எந்தந்த உணவில் இருக்கிறது..?

மெக்னீசியம் நிறைந்த உணவுகள்

32

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Magnesium

சமீப காலமாக சமூக ஊடங்களில் மெக்னீசியம் தொடர்பான பதிவுகளும் அதிகரித்துள்ளது, மெக்னீசியம் நமது உடல் நலத்துக்கு எவ்வளவு முக்கியமானது, இது எடுத்துக்கொள்வது ஏன் அவசியம் என்பதை இப்பதிவில் தெரிந்துக்கொள்வோம்.

இந்த மெக்னீசியம் நமது ஆரோக்கியமும் நல்வாழ்வும் அதை சார்ந்துள்ளது என்று பலருக்கும் தெரியாது, மெக்னீசியம் நம் உடலில் 300-க்கும் மேற்பட்ட உயிர்வேதியியல் செயல்முறைகளில் பங்கேற்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?

நமது உடலில் பல்வேறு முக்கிய செயல்பாடுகளுக்கும், நம் அன்றாட உணவில் இருக்க கூடிய முக்கிய நுண்ணூட்டச்சத்தாக மெக்னீசியம் உதவுகிறது.இது தசைகள் ,நரம்புகள் மற்றும் எலும்புகள் ஆகியவற்றின் சரியான செயல்பாட்டிற்கும், ஆற்றல் உற்பத்திக்கும், மேலும் நோய் எதிர்ப்பு சக்திக்கும் அவசியமாகவும் சில நேரங்களில் நமக்கு கூடுதல் மருந்துகளாகவும் பயன்படுகிறது.

பச்சை இலைக் காய்கறிகள் சுத்திகரிக்கப்படாத தானியங்கள் , பருப்புகள் மற்றும் விதைகளில் மெக்னீசியம் அதிக அளவில் காணப்படுகிறது. இந்த மெக்னீசியம் உடலுக்கு மட்டுமல்ல மூளையில் வளர்சிதை மாற்றத்திற்கும் இது உதவுகிறது. நமக்கு ஏற்படும் பதற்றத்தையும்,மனச்சோர்வின் அறிகுறிகளையும் குறைப்பதில் மெக்னீசியம் உதவியாக இருக்கும் எனவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

அதிக அளவு மேக்னீசியம் உட்கொள்ளும் நபர்களுக்கும் குறைந்த அளவு உட்கொள்ளும் நபர்களை விட உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் அபாயம் 8 % குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அதிக அளவு மெக்னீசியம் உட்கொள்பர்களுக்கும் ,குறைந்த அளவு மேக்னீசியம் உட்கொள்பவர்களை விட மாரடைப்பு ஏற்படும் அபாயம் 39% குறைவாக இருப்பதாக பகுப்பாய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

நீரிழிவு நோய்,குடிபழக்கம்,செரிமான பாதையில் ஏற்படும் நோய்கள் ,மரபணு கோளாறூகள் போன்ற பல உடல்நலப் பிரச்சனைகளுடன் மேக்னீசியம் குறைபாடும் சேர்க்கப்பட்டுள்ளது.

உணவில் இருந்து அதிக மெக்னீசியம் பெற முடியாது, ஆனால் உங்களுக்கு மெக்னீசியம் சப்ளிமெண்ட் பரிந்துரைக்கப்பட்டிருந்தால், பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகமாக எடுத்துக்கொள்ளாமல் இருப்பது முக்கியம். சப்ளிமெண்ட் மூலம் அதிக மெக்னீசியம் உட்கொள்வது வயிற்றுப்போக்கு , குமட்டல் மற்றும் வயிற்றுப் பிடிப்பை ஏற்படுத்தும்.

எனவே நமது அன்றாட உணவில் போதுமான அளவு மெக்னீசியம் சேர்த்துக்கொள்வது சீரான ஆரோக்கியத்தை தரும் என்கிறார்கள்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தேர்தல் என்று வந்துவிட்டால் இருமுனைப் போட்டி தான் - அண்ணாமலை

5
33 mins agoshare
ஊட்டியில் அண்ணாமலை பேட்டிbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved