news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews 15 வருட காதல், நொடியில் நடந்த பயங்கரம்
tv

Also Watch

tv

Read this

15 வருட காதல், நொடியில் நடந்த பயங்கரம்

நொய்டா, டெல்லி

22

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சாலையோரத்தில் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்த கார். பக்கத்தில் சென்று பார்த்த நபருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி. காருக்குள் ரத்தவெள்ளத்தில் கிடந்த ஜோடி. வாட்ஸ் ஆப்பில் இருந்த ஒற்றை மெசேஜால் வெளிவந்த பகீர் உண்மை. காதல் விவகாரத்தில் நடந்த கொடூரமா? அல்லது வேறு ஏதும் காரணமா? நடந்தது என்ன?

சாலையோரத்தில் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்த கார்
நொய்டா செக்டார் பகுதி ரோட்டோரமா வெள்ளை கலர் காரு ஒன்னு ரொம்ப நேரமா நின்னுட்டு இருந்துச்சு. அத பாத்த நபர் ஒருத்தரு, காரு எதுக்கு இவ்வளவு நேரமா நின்னுட்டு இருக்குன்னு பக்கத்துல போய் பாத்துருக்காரு. அப்போ, அந்த காரோட முன் சீட்ல ஒரு பொண்ணும், பையனும் ரத்த வெள்ளத்துல சடலமா கிடந்துருக்காங்க. அத பாத்ததும் கதிகலங்கி போனவரு, உடனே போலீஸுக்கு ஃபோன் பண்ணி தகவல் சொல்லிருக்காரு. கொஞ்ச நேரத்துலேயே ஸ்பாட்டுக்கு வந்த போலீஸ்காரங்க, கார திறக்க முயற்சி பண்ணாங்க. ஆனா, கார் உள் பக்கமா லாக் ஆகிருந்ததால, கார் கண்ணாடிய உடைச்சு, ரெண்டு சடலங்களையும் வெளியே எடுத்தப்ப, அவங்க தலை பகுதில துப்பாக்கி குண்டு பாஞ்சிருந்தது தெரியவந்துச்சு. அதோட, அந்த பையன் கையில துப்பாக்கி பிடிச்சபடி இருந்துருக்குது. அடுத்து, ரெண்டு சடலத்தையும் போஸ்ட் மார்டத்துக்கு அனுப்பி வச்ச போலீஸ், விசாரணையில இறங்குனாங்க.

செல்போன் மூலம் வெளிவந்த உண்மைகள்
முதற்கட்டமா, அந்த பொண்ணும், பையனும் யாரு? அவங்களுக்கு என்ன நடந்துச்சுன்னு தோண்டி துருவ ஆரம்பிச்ச போலீஸ்காரங்க. காருக்குள்ள இருந்த அந்த பையனோட செல்போன எடுத்து சோதனை பண்ணிருக்காங்க. அதுலதான், ரெண்டு பேரும் யாரு? அவங்களுக்கு என்ன நடந்துச்சு அப்டிங்குறதுக்கான மொத்த காரணமும் வெளிச்சத்துக்கு வந்துச்சு.

உயிருக்கு உயிராக காதலித்து வந்த ரேகா-சுமித் ஜோடி
டெல்லி, திரிலோக்புரி-ங்குற பகுதிய சேர்ந்த ரேகாவும், நொய்டாவ சேர்ந்த சுமித்தும், ஸ்கூல் படிக்கும் போதுல இருந்தே ஒருத்தருக்கொருத்தரு காதலிச்சிட்டு இருந்துருக்காங்க. கிட்டத்தட்ட 15 வருஷத்துக்கு மேல ரெண்டு பேரும் காதலிச்சுட்டு வந்த நேரத்துல, கடந்த ஆறு மாசத்துக்கு முன்னாடி ரேகாவ பொண்ணு கேட்டு சுமித் அவங்க வீட்டுக்கு போய்ருக்காரு. அப்போ, ரேகாவோட அப்பா, என் பொண்ண உனக்கு கட்டிக் கொடுக்க மாட்டேன்னு சொல்லிருக்காரு. அதுமட்டுமில்ல, இதுக்கு மேலயும் பொறுமையா இருக்கக்கூடாதுன்னு சொல்லி, தன் மகளுக்கு மாப்பிள்ளை தேட ஆரம்பிச்சிருக்காரு.

சாதியை காரணம் காட்டி காதலுக்கு எதிர்ப்பு
மகளோட காதல் விஷயம் தெரிஞ்சதுல இருந்தே, எவ்வளவு வேலை இருந்தாலும் ரேகாவ, தானே ஆஃபிஸுக்கு கொண்டு போய் விட்டுட்டு, தானே திரும்ப கூப்டு வந்து வீட்டுல விட்டுட்டு இருந்துருக்காரு. இதனால, காதலிக்கிட்ட பேச முடியாம சுமித் தவிச்சிட்டு இருந்துருக்காரு. மகளோட காதலுக்கு கீரின் சிக்னல் காட்டாததுக்கு முக்கிய காரணம், சுமித் வேற சாதிய சேர்ந்தவரு. என்ன நடந்தாலும், வேற சாதி பையனுக்கு என் பொண்ண கட்டிக் கொடுக்க மாட்டேன்னு பிடிவாதமா இருந்துருக்காரு ரேகாவோட அப்பா. அதே மாதிரி ரேகாவும் தன்னோட காதல்ல உறுதியா இருந்துருக்காங்க.

தந்தை கண்ணீர் வடித்ததும் மனம் மாறிய ரேகா
இதனால அப்பாவுக்கும், மகளுக்கும் இடையில கடந்த சில நாட்களாவே அடிக்கடி மோதல் ஏற்பட்டிருக்கு. ரேகாவுக்கு கூட பிறந்தவங்க மொத்தம் 3 பேரு. மூத்த பொண்ணுக்கு கல்யாணமாகிருச்சு. ரெண்டாவது மகள்தான் இந்த ரேகா. மகள் வேற சாதி பையன கல்யாணம் பண்ணிக்கிட்டா, அடுத்து இருக்குற பொண்ணோட வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுருமேன்னு நினச்சு அவங்க அப்பா ரொம்பவே பயந்துருக்காரு. உனக்காக இல்லன்னாலும் பரவாயில, உன் தங்கச்சிக்காக-வாவது இந்த காதல குழி தோண்டி புதச்சிருன்னு சொல்லி கெஞ்சிருக்காரு. அப்பா இந்த அளவுக்கு இறங்கி வந்து பேசுனத பாத்ததும் ரேகாவும், நீங்க பாக்குற மாப்பிள்ளையே கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டாங்க. அதுக்குப்பிறகு, ஆறு மாசமா தேடி அலஞ்சு, மகளுக்கு ஒரு வரன் பாத்திருக்காரு ரேகாவோட அப்பா. இத தெரிஞ்சிக்கிட்ட சுமித் மனசு உடஞ்சி போய்ருக்காரு. உடனே காதலி ரேகாவுக்கு ஃபோன் பண்ண சுமித், உங்க அப்பா உனக்கு மாப்பிள்ளை பாத்துட்டாரு. இப்படியே போச்சுன்னா நாம ஒன்னு சேர முடியாம போய்ரும், இப்பவே என்கூட வந்துரு, நாம கல்யாணம் பண்ணிக்கலாம்னு காதலிய கூப்பிட்டுருக்காரு சுமித். ஆனா, நான் எங்க அப்பா அம்மாவ விட்டு வர மாட்டேன்னு ரேகா திட்டவட்டமா சொன்னதா சொல்லப்படுது.

காருக்குள் சுமித்-ரேகா இடையே ஏற்பட்ட வாக்குவாதம்
அப்போ, உங்க அப்பா கூட சேந்துட்டு நீயும் என்ன ஏமாத்த பாக்குறியான்னு கேட்டு ஆவேசமான சுமித், அவங்கக்கிட்ட ஃபோன்லே சண்ட போட்டுருக்காரு. இதுக்கு நடுவுல, 13-ந்தேதி சாயங்கலாம் ரேகாவோட அப்பா வர்றதுக்கு முன்னாடி, அவங்க வேலை பாக்குற ஆஃபிஸுக்கு கார் கொண்டு போன சுமித், காதலிய வெளிய வர சொல்லி கார்ல கூப்பிட்டுக்கிட்டு போயிருக்காரு. அப்ப, தன்னை கல்யாணம் பண்ணிக்கோன்னு சுமித் மறுபடியும் கேக்க, அதுக்கு ரேகா மறுப்பு தெரிவிச்சிருக்காங்க. அப்போ, நொய்டா செக்டார் பகுதில சாலையோரத்துல கார நிறுத்தி, தான் மறைச்சி வச்சிருந்த துப்பாக்கிய எடுத்து, ரேகாவ காருக்குள்ளயே வச்சு சுட்டு கொன்னுருக்காரு. அதுக்குப்பிறகு, அதே துப்பாக்கியால தன்னை தானே சுட்டுக்கிட்டு தற்கொலை பண்ணிக்கிட்டாரு சுமித்.

வாட்ஸ் ஆப்பில் இருந்த மெசேஜால் வெளிவந்த உண்மை
இந்த சம்பவம் நடக்குறதுக்கு முன்னாடி, ஃபோன்ல இருந்து தன்னோட அண்ணிக்கு ஒரு மெசேஜ் அனுப்பிருந்துருக்காரு சுமித். அதுல, ரேகா, என்னைய ஏமாத்திட்டா, 15 வருஷம் என்கூட இருந்துட்டு, இப்போ வீட்டுல சொல்ற பையன கல்யாணம் பண்ணிக்க போறா, அதான், அவள கொன்னுட்டு தானும் சாக போறேன்னு டைப் பண்ணி அனுப்பிருந்துருக்கான். விசாரணையில மொத்த உண்மையும் தெரியவந்ததும் வழக்குப்பதிவு செஞ்ச போலீஸ் தொடர்ந்து விசாரணை பண்ணிட்டு இருக்காங்க.

Related Link
இளைஞரை காவிரி ஆற்றில் வீசிய நண்பர்கள்

இளைஞரை காவிரி ஆற்றில் வீசிய நண்பர்கள்

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தனது தகுதி தான் குறையும் - காட்டமாக பேசிய முதலமைச்சர்

5
20 mins agoshare
தருமபுரியில் முதல்வர் பிரச்சாரம்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved