Also Watch
Read this
By: Web Team

வங்கதேசத்தின் ராஜ்பாரி மாவட்டத்தில் இந்து மதத்தை சேர்ந்த இளைஞரை கும்பல் ஒன்று அடித்து கொன்றதாக, அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர். ராஜ்பாரி மாவட்டத்தின் பாங்ஷா உபசிலாவில் உள்ள ஹொசைந்தங்கா சந்தையில், 29 வயதான இந்து இளைஞர் அம்ரித் மண்டல் என்பவர் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. அவர், உள்ளூர் குழுவின் தலைவராக இருந்தவர் என்றும், பொதுமக்களை மிரட்டி பணம் பறித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டால் ஆத்திரமடைந்த கும்பல் அம்ரித் மண்டலை தாக்கியதாக முதற்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved