Also Watch
Read this
By: Web Team

நேருவின் புகழை சிதைக்க வேண்டும் என்பதே பாஜக அரசின் திட்டம் என காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சித் தலைவர் சோனியா காந்தி கண்டித்துள்ளார். டெல்லி ஜவஹர் பவனில் நேரு மையத்தை துவக்கி வைத்து அவர் பேசினார். நாட்டின் வரலாற்றில் இருந்து ஜவஹர்லால் நேருவின் பெயரை அழித்து விட வேண்டும் என பாஜக நினைப்பதாக சோனியா குற்றஞ்சாட்டினார்.நேருவின் புகழை சிதைத்து அவருக்கு அவப்பெயரை ஏற்படுத்தி விட வேண்டும் என திட்டமிட்டுள்ள பாஜக அரசு அதற்கான முயற்சிகளை படிப்படியாக எடுத்து வருவதாகவும் ஆனால் அதை ஒருபோதும் ஏற்க முடியாது என்றும் சோனியா காந்தி கூறினார். இந்திய சுதந்திர போராட்டத்தில் நேருவின் பங்கை மூடி மறைக்கவும், சுதந்திரத்திற்கு பிறகு அவர் இந்தியாவில் ஏற்பட்ட சவால்களை சமாளித்ததை மறைத்து வரலாற்றை திருத்தி எழுதவும் சங்க பரிவாரங்கள் முனைந்துள்ளதாக குற்றஞ்சாட்டினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved