news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews தொழில்நுட்ப பிரச்சனையால் பழுதாகி நின்ற பிரிட்டிஷ் போர் விமானம்..
tv

Also Watch

tv

Read this

தொழில்நுட்ப பிரச்சனையால் பழுதாகி நின்ற பிரிட்டிஷ் போர் விமானம்..

இந்திய அரசுக்கு நன்றி

36

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
33

தொழில் நுட்ப பிரச்சனையால், கடந்த மாதம் 14 ஆம் தேதி முதல் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பிரிட்டனின் F-35B நவீன போர் விமானம், பிரிட்டனில் இருந்து வந்த பொறியாளர்களால் பழுது பார்க்கப்பட்டு இன்று பிரிட்டனுக்கு புறப்பட்டு சென்றது.

கடந்த ஆறாம் தேதி பிரிட்டனில் இருந்து வந்த பொறியாளர்கள் விமானத்தை பழுது பார்த்து, அனைத்து பிரச்சனைகளும் சரி செய்யப்பட்டு விமானம் புறப்பட்டு சென்றதாக பிரிட்டிஷ் தூதரகம் தெரிவித்துள்ளது.

இத்தனை நாட்கள் விமானத்தை இந்தியாவில் நிறுத்த அனுமதித்து தேவையான அனைத்து உதவிகளையும் செய்த இந்திய அரசுக்கு நன்றி தெரிவிப்பதாக பிரிட்டிஷ் தூதரகம் தெரிவித்துள்ளது.

அரபிக் கடலில் போர்ப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்த விமானம், எரிபொருள் பற்றாக்குறையால் திருவனந்தபுரத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டாலும், அதன் பின்னர் விமானத்தில் ஹைட்ராலிக் தொழில் நுட்ப பிரச்சனை ஏற்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நியூஸ் தமிழ் கிராம சபை, கிராம மக்கள் ஆர்வம்

10
22 mins agoshare
ராதாபுரத்தில் கிராம சபைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved