Also Watch
Read this
By: Web Team

கேரளாவின் எர்ணாகுளத்தில் ஓடும் ரயிலில் இருந்து இறங்கிய பெண், விபத்தில் இருந்து உயிர்தப்பிய சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. எர்ணாகுளம் வடக்கு ரயில் நிலைய நடைமேடையில் வந்து கொண்டிருந்த அந்த ரயிலில் இருந்து பெண் பயணி கீழே இறங்கினார்.
எதிர் திசையை நோக்கி இறங்கியதால் அப்பெண் நிலைதடுமாறி ரயில் படிக்கட்டை பிடித்தப்படி கீழே விழுந்தார். அப்போது நடைமேடையில் சென்று கொண்டிருந்த பயணி, துரிதமாக செயல்பட்டு அந்த பெண்ணை இழுத்து மீட்ட காட்சி, அங்கிருந்த சிசிடிவில் பதிவானது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved