Also Watch
Read this
By: Web Team

கர்நாடகாவில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 300-ஐ தாண்டியதையடுத்து மக்கள் பொது இடங்களில முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் சுமார் 3 ஆயிரத்து 900 பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாளுக்கு நாள் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 87 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு எண்ணிக்கை 311 ஆக உயர்ந்துள்ளது.
அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள மாநில சுகாதாரத்துறை தேவையான மருத்துவ கட்டமைப்புகள் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது.