Also Watch
Read this
By: Web Team

இந்தியாவுக்கு பெரும்பாலும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கச்சா எண்ணெய் வருவதில்லை என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி விளக்கமளித்துள்ளார்.
உலக நாடுகளின் கச்சா எண்ணெய் வர்த்தகமானது ஹார்முஸ் நீர்முனை வழியாகவே நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலைத் தொடர்ந்து, ஹார்முஸ் நீர்முனையை மூடுவதற்கு ஈரான் நாடாளுமன்றம் அனுமதி அளித்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் பெட்ரோல் டீசல் விலை மிக கடுமையாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், எரிபொருள் விநியோகத்தின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் புரி உறுதியளித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved