Also Watch
Read this
By: Web Team

பாலியல் புகாரில் கைதான டெல்லி சாமியார் சைதன்யானந்த சரஸ்வதி கடந்த 50 நாட்களில் 15 ஹோட்டல்களில் மாறி மாறி தங்கியிருந்தது தெரியவந்துள்ளது. ஸ்ரீசாரதா மடத்துடன் தொடர்புடைய கல்வி நிறுவனத்தில் மேனேஜராக இருந்த சாமியார் சைதன்யானந்தா, 17 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் தலைமறைவானார்.
தலைமறைவாக இருந்த சாமியாரை டெல்லி காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். இந்நிலையில் காவல்துறை கண்ணில் படாமல் இருக்க, சிசிடிவி இல்லாத வாடகை மலிவான விடுதிகளாக தேடித்தேடி சாமியார் மறைந்திருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.