Also Watch
Read this
By: Web Team

ஒடிசா மாநிலத்தில் தனது பாதத்தை தொட்டு வணங்காததால், 30க்கும் மேற்பட்ட மாணவர்களை அரசு பள்ளி ஆசிரியை மூங்கில் குச்சியால் கண்மூடித்தனமாக அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையறிந்து கோபமுற்ற பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்ததை அடுத்து, ஆசிரியை சுகந்தி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.