Also Watch
Read this
By: Web Team

மகாராஷ்டிரா மாநிலம், மும்பை, தானே உள்ளிட்ட பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை காரணமாக 10 பேர் உயிரிழந்த நிலையில், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மும்பை, தானே, பால்கர், ராய்காட் உள்ளிட்ட இடங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. மேலும் மழையால் பாதிக்கப்பட்ட இடத்தில் இருந்து 11 ஆயிரத்து 800-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved