Also Watch
Read this
By: Web Team

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் சிறுபான்மையினருக்கு நெருக்கடி அதிகரித்துள்ளதாக கவலை தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத நல்லிணக்கத்தை கெடுக்க நினைக்கும் சக்திகளின் கொட்டம் நீண்ட நாள் நீடிக்காது என திட்டவட்டமாக தெரிவித்தார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள குட் ஷெப்பர்ட் பள்ளியில் நடைபெற்ற நூற்றாண்டு விழாவில் பங்கேற்று பேசிய முதலமைச்சர், சாதி-மத பிரிவினை பார்க்காமல் எல்லோரையும் சமமாக நடத்த கூடிய பண்புகளை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.
மேலும், ரோல் மாடலை இன்ஸ்டாகிராமில் தேடாதீர்கள் என்றும் அறிவுரை வழங்கினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved