news-tamil-logo

3/15/2026, 12:00:14 PM

news-tamil-logo
more
Home indianews மாமியார் மீது பாய்ந்த காமூகன்
tv

Also Watch

tv

Read this

மாமியார் மீது பாய்ந்த காமூகன்

நாகர்கர்னூல், தெலங்கானா

Posted on: Feb 11, 2026 12:35 PM

35

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

இரவு நேரத்தில் வீட்டில் இருந்து கேட்ட அலறல் சத்தம். மூதாட்டியின் வீட்டிற்கு பதறியடித்து சென்ற கிராம மக்கள். நடு வீட்டில் மூதாட்டி தலையில் பலத்த காயங்களுடன் சடலமாக கிடந்த கொடூரம். தப்பியோடிய மருமகனை வலைவீசி தேடி வரும் போலீஸ். மாமியார் கொலை செய்யப்பட்டது ஏன்? நடந்தது என்ன?

போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் வெளியான அதிர்ச்சி தகவல்
நாகர் கர்னூல் பகுதியில உள்ள ஒரு வீட்ல இருந்து திடீர்ன்னு அலறல் சத்தம் கேட்ருக்கு. சத்தத்த கேட்டு சின்னம்மாவோட வீட்டுக்கு ஓடிப் போய்ருக்காங்க மக்கள். அப்ப நடுவீட்ல சின்னம்மா தலையில ரத்தக் காயங்களோட உயிரிழந்து கிடந்தாங்க. இந்த விஷயத்த கேள்விப்பட்டு ஸ்பாட்டுக்கு வந்த போலீஸ் சடலத்த மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வச்சாங்க. அடுத்து சின்னம்மாவுக்கு என்ன ஆச்சுன்னு அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்க கிட்ட விசாரணை பண்ணாங்க. சின்னம்மாவோட மகள் கூட அவரது கணவன் ராகவேந்திரா தினமும் சண்டை போட்டுட்டு தான் இருப்பாரு, சம்பவம் நடந்த அப்ப, ராகேவேந்திரா வீட்ல இல்லை, அவன் தான் சின்னம்மாவ கொலை பண்ணிருக்கனும்ன்னு சொல்லிருக்காங்க. இதுக்கிடையில வெளியான போஸ்ட் மார்டம் ரிப்போர்ட்ல மூதாட்டி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டது தெரியவந்துருக்கு. இதனால போலீஸ் ராகவேந்திராவ வலை வீசி தேட ஆரம்பிச்சாங்க.

Related Link
AIஆல் வெளிவந்த பகீர் உண்மை

AIஆல் வெளிவந்த பகீர் உண்மை

வேண்டாத சேர்க்கையால் மதுவுக்கு அடிமையான ராகவேந்திரா
தெலங்கானா, நாகர்கர்னூல் பகுதிய சேந்த சின்னம்மாவுக்கு ரெண்டு மகள்கள் இருக்காங்க. இதுல மூத்த மகள் ரேணுகாவுக்கு அதே பகுதிய சேந்த ராகவேந்திரா கூட சில மாதங்களுக்கு முன்னாடி கல்யாணமாகிருக்கு. கல்யாணமான புதுசுல ராகவேந்திரா மனைவிய நல்லபடியா பாத்துட்டு இருந்தாரு. ஆனா நாள் போக போக வேண்டாத சேர்க்கையால மதுபோதைக்கு அடிமையான ராகவேந்திரா டெய்லி குடிச்சுட்டு வந்து மனைவிய போட்டு அடிச்சு சித்ரவதை பண்ணிருக்காரு. இதனால கணவன் - மனைவிக்கு இடையில அடிக்கடி பிரச்னை ஏற்பட ஆரம்பிச்சுருக்கு. கணவனோட நடவடிக்கைய பாத்து நொந்து போன மனைவி நடந்த எல்லா விஷயத்தையும் தன்னோட தாய்க்கு ஃபோன் பண்ணி சொல்லிருக்காங்க.

மீண்டும் மது போதையில்...

இதனால பதறியடிச்சுட்டு மகளோட வீட்டுக்கு போன தாய், ரெண்டு பேரையும் சமாதானப்படுத்தி தன்னோட வீட்டுக்கு அழைச்சுட்டு போய்ருக்காங்க. அங்க போனதுக்கு அப்புறம் ராகவேந்திரா கொஞ்சம் நாட்கள் மட்டும் அமைதியா இருந்துருக்காரு. அதுக்கடுத்து மறுபடியும் மதுபோதைக்கு அடிமையான நபர், மனைவி கூட சண்டை போட்டுட்டே இருந்தாரு. ராகவேந்திரா திருந்தமாட்டான்னு முடிவு செஞ்ச ரேணுகா தன்னோட சொந்தக்காரங்க வீட்டுக்கு போய்ட்டு வசிக்க ஆரம்பிச்சுருக்காங்க. அதுக்கப்புறம் மாமியார், மருமகன் மட்டும் அந்த வீட்ல தனியா இருந்துருக்காங்க. அந்த நேரத்துல டெய்லி மதுபோதையில வீட்டுக்கு வர்ற ராகவேந்திராவோட குறுக்கு புத்தி தப்பா யோசிக்க ஆரம்பிச்சுருக்கு. சம்பவத்தன்னைக்கு ஃபுல் போதையில வீட்டுக்கு போய்ருக்கான் ராகவேந்திரா. அப்ப மாமியார் சின்னம்மா தூங்கிட்டு இருந்துருக்காங்க.

Related Link
டீசலை மனைவி மீது கொப்பளித்து கொடூரம்

டீசலை மனைவி மீது கொப்பளித்து கொடூரம்

மாமியாரை பலாத்காரம் செய்த மருமகன்
அப்ப சின்னம்மாவோட அறைக்குள்ள போன ராகவேந்திரா, அவங்கள சரமாரியா தாக்கி தப்பா நடக்க முயற்சி பண்ணிருக்கான். இத பாத்து பயந்துபோன மாமியார் கத்தி கூச்சல் போட்ருக்காங்க. ஆனா அவங்க வாய பொத்தி கீழ தள்ளிவிட்ட ராகவேந்திரா, அவங்கள பாலியல் வன்கொடுமை பண்ணிருக்கான். அடுத்து மூதாட்டிய உயிரோட விட்டு வச்சா, இந்த விஷயத்த எல்லார் கிட்டயும் சொல்லி நம்மள மாட்டி விட்ருவான்னு பயந்துபோன ராகவேந்திரா, வெளியில கிடந்த கல்ல எடுத்துட்டு வந்து, மூதாட்டியோட தலையில பலமுறை ஓங்கி அடிச்சுட்டு தப்பிச்சு போய்ட்டான். இதனால வலி தாங்க முடியாத சின்னம்மா சம்பவ இடத்துலையே துடிதுடிச்சு உயிரிழந்துட்டாங்க. விசாரணையோட முடிவுல எல்லா உண்மையையும் தெரிஞ்சுக்கிட்ட போலீஸ் தலைமறைவா இருக்குற ராகவேந்திராவ வலைவீசி தேடிட்டு இருக்காங்க.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழக தேர்தல் தேதி அறிவிப்பு

1
21 mins agoshare
Election datebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved