Also Watch
Read this
By: Web Team

முதலமைச்சர் இல்லத்தை விட்டு வெளியேறி ஒரு வருடங்கள் கழித்து, கெஜ்ரிவாலுக்கு அரசு பங்களாவை ஒதுக்கியுள்ளது மத்திய அரசு. ஒரு தேசிய கட்சியின் தலைவர் என்ற முறையில் தனக்கு அரசு பங்களாவை ஒதுக்க வேண்டும் என கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில் வழங்கப்பட்ட தீர்ப்பின் படி, லோதி எஸ்டேட்டில் உள்ள ஏழாம் வகை பங்களா அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 4 பெட்ரூம்கள், 3 உதவியாளர் அறைகள், இரு அலுவலகங்களுடன் கூடிய புதிய பங்களாவில் கெஜ்ரிவால் விரைவில் குடியேறுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved