Also Watch
Read this
By: Web Team

சுமார் 273 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி அபராத விதிப்புக்கு எதிராக பதஞ்சலி சாமியார் ராம்தேவ் தாக்கல் செய்த வழக்கை அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
இப்படி அபராதம் விதிப்பது கிரிமினல் நடவடிக்கை எனவும், முறையாக விசாரணை நடத்திய பிறகே இந்த அளவுக்கு அபராதம் விதிக்க முடியும் என ராம்தேவ் தரப்பில் வாதிடப்பட்டதை நீதிபதி சேகர் ஷரப், விபின் சந்திர தீட்சித் அமர்வு நிராகரித்தது.
கிரிமினல் நீதிமன்ற விசாரணை இல்லாமலேயே, ஜிஎஸ்டி பிரிவு 122 ன் படி சிவில் வழக்கின் அடிப்படையில் அபராதம் விதிக்க ஜிஎஸ்டி அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஹரித்வார்,சோனிபேட் மற்றும் அகமதுநகரில் உள்ள உற்பத்தி ஆலைகளில் போலியான ரசீதுகளை கொடுத்து வரி ஏய்ப்பு நடத்தியதாக ராம்தேவ் மீது வழக்கு தொடரப்பட்டது.