Also Watch
Read this
By: Web Team

ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் பழைய மெட்ரோ பயண அட்டையை பயன்படுத்த முடியாது என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மெட்ரோ பயண அட்டை பயன்பாட்டிலிருந்து தேசிய பொது போக்குவரத்து அட்டைக்கு மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதால், பழைய மெட்ரோ பயண அட்டை ரீசார்ஜ் செய்யும் வசதி நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அதில் பணம் இருக்கும் வரை பயணிகள் பயன்படுத்தி கொள்ளலாம் எனவும் மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் 50 ரூபாய்க்கு குறைவாக பயண அட்டையில் பணம் இருந்தால் மெட்ரோ ரயில் நிலையங்களில் கொடுத்துவிட்டு புதிய தேசிய பொது போக்குவரத்து அட்டையை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved