Also Watch
Read this
By: Manigandan Raja

ஏப்ரல் 30 முதல் ஜம்முதாவி வரை நீட்டிப்பு - மத்திய அமைச்சர் :

ஜம்மு காஷ்மீரில் ஸ்ரீநகர் - மாதா வைஷ்ணவ தேவி கோவில் இடையே இயக்கப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், வரும் 30-ம்தேதி முதல் ஜம்மு தாவி வரை நீட்டிக்கப்படும் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். மேலும், இந்த ரயில் இனி 8 பெட்டிகளுக்கு பதிலாக 20 பெட்டிகளுடன் இயக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தோல்வி எதிரொலி :
மக்களவையில் பெரும்பான்மையின் காரணமாக மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தோல்வியடைந்த நிலையில், காங்கிரஸ் மற்றும் திமுகை-வை கண்டித்து புதுச்சேரியில் பாஜக மகளிரணியினர் கண்டன பேரணி மேற்கொண்டனர். அப்போது நூற்றுக்கணக்கானோர் பாஜக-வுக்கு ஆதரவாக முழக்கம் எழுப்பினர்.
பல்வேறு மாநிலங்களில் மின்வெட்டு ஒத்திகை நிகழ்ச்சி :

பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், அவசரகால தயார் நிலையை வலுப்படுத்தும் நோக்கிலும், நாட்டின் பல்வேறு இடங்களில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்று இரவு மின்வெட்டு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த வகையில், ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ், மொஹாலியில் நேற்று இரவு மின்வெட்டு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
மருத்துவர் ஓட்டி சென்ற கார், ஆட்டோ மீது மோதி விபத்து :
டெல்லியில் மருத்துவர் ஓட்டி சென்ற கார், ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானதில், ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்த நிலையில், மூன்று சிறார்கள் மற்றும் இரு பெண்கள் உள்பட ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர்.
தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் மருத்துவர் சித்தார்த்தின் காரை பறிமுதல் செய்த நிலையில், அவர் மது போதையில் இருந்தாரா? என போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்காலிக குடோனில் தீ விபத்து :
உத்தரப்பிரதேச மாநிலம் மணிப்பூரி பகுதியில் உள்ள தற்காலிக குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து அப்பகுதி மக்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.