Also Watch
Read this
By: Web Team

பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடைமுறையின் முதற்கட்டம் முடிவடைந்திருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி நடைபெற்று வரும் இந்த சிறப்பு நடைமுறையின் மூலம், தற்போது வரை 35 லட்சம் வாக்காளர்கள் மாநிலத்தை விட்டு நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்கள் அல்லது தொடர்பு கொள்ள முடியாதவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், 22 லட்சம் வாக்காளர்கள் இறந்துவிட்டதாகவும், கிட்டத்தட்ட 7 லட்சம் வாக்காளர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.