Also Watch
Read this
By: Web Team

நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிந்த நிலையில் மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா வழங்கிய தேநீர் விருந்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருடன் காங்கிரஸ் எம்.பி பிரியங்கா கலந்துரையாடினர். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த ஒன்றாம் தேதி துவங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது. இந்த கூட்டத்தொடரில் தேர்தல் சீர்திருத்தம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. அணுசக்தி துறையில் தனியாரை அனுமதிக்கும் மசோதா, மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்திற்கு மாற்றாக கொண்டு வரப்பட்ட, 'விபி ஜி ராம் ஜி' மசோதா உள்ளிட்டவை விவாதத்துக்கு பிறகு நிறைவேற்றப்பட்டன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved