Also Watch
Read this
By: Web Team

கேரளாவின் எர்ணாகுளத்தில் காவல் நிலையத்திற்குள் வைத்து கர்ப்பிணியை பளார் என காவல் அதிகாரி கன்னத்தில் அறைந்த அதிர்ச்சி சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கொச்சியை சேர்ந்த ஷிமோலின் ((Shymol )) கணவரை கடந்தாண்டு ஜூலை மாதம் போலீசார் பொய் வழக்கில் கைது செய்ய முயற்சித்ததாக தெரிகிறது. இதனால் காவல் நிலையம் சென்று தட்டிக் கேட்ட ஷிமோலை, காவல் அதிகாரி சந்திரன் ஆபாச வார்த்தைகளில் திட்டியதோடு, கன்னத்திலும் அறைந்தார். இந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து போலீசார் தற்போது சிசிடிவி காட்சிகளை வெளியிட்டுள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved