Also Watch
Read this
By: Web Team

மசோதாக்கள் மீது முடிவெடுக்கும் விவகாரத்தில் மாநில அரசுகள் வழக்கு போட முடியாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
சட்டபைகளில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க குடியரசு தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கு உச்ச நீதிமன்றம் கால நிர்ணயம் செய்தது தொடர்பாக, குடியரசு தலைவர் 14 கேள்விகளை எழுப்பி இருந்தார்.
இந்த விவகாரத்தை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல்சாசன அமர்வு விசாரித்து வரும் நிலையில், மசோதாக்கள் மீது ஜனாதிபதி, கவர்னர்கள் முடிவெடுக்கும் விவகாரத்தில் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் மாநில அரசுகள் வழக்கு தொடர முடியாது என மத்திய அரசு வாதிட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved