Also Watch
Read this
By: Web Team

நகைச்சுவை நடிகர் முனாவர் ஃபரூக்கியை கொலை செய்ய திட்டமிட்டிருந்த ரவுடிகள் இருவரை, டெல்லி போலீசார் கைது செய்தனர். கைதான இருவரும் பிரபல ரவுடிகள் கோல்டி பிரார், ரோகித் கோதாரா மற்றும் விரேந்தர் சரண் ஆகியோரது உத்தரவின்படி கொலை செய்ய திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்தது.
ஏற்கனவே கொலை வழக்குகளில் தேடப்படும் ராகுல், சஹில் ஆகியோர் மீண்டும் கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, போலீசார் அவர்களை கைது செய்ய முயன்ற போது இரு தரப்புக்கும் துப்பாக்கிச் சண்டையும் நடைபெற்றது.