news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home justnownews கூட்டணி ஆட்சியா? ஒரு கட்சி ஆட்சியா?
tv

Also Watch

tv

Read this

கூட்டணி ஆட்சியா? ஒரு கட்சி ஆட்சியா?

அதிரும் தேர்தல் களம் 2026

57

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

"கூட்டணி ஆட்சியா? ஒரு கட்சி ஆட்சியா? மக்கள் முடிவு செய்வார்கள்" என காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு
கூட்டணி ஆட்சியா? அல்லது ஒரு கட்சி ஆட்சியா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். 2006ல் மக்கள் தீர்ப்பை செயல்படுத்தாதது நம் (காங்கிரஸ்) தவறு
இவ்வாறு மாணிக்கம் தாகூர் குறிப்பிட்டுள்ளார்.

ஆட்சியில் பங்கு கிடைக்குமா?
காங்கிரஸ் அதிக தொகுதியில் போட்டியிடும் என்றும், ஆட்சியில் பங்கு வேண்டும் என்றும், காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், தொடர்ந்து கூறி வருகிறார். தற்போது, ஆட்சியில் பங்கு தர வாய்ப்பில்லை என்று கூறி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

முதல்வர் கருத்து, மாணிக்கம் தாகூர் பதிவு
இந்த சூழலில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்துக்கு பதில் அளிக்கும் வகையில் மாணிக்கம் தாகூர் பதிவிட்டுள்ளார். இதன் வாயிலாக, காங்கிரஸ் எம்பி மீண்டும் சர்ச்சையை தொடங்கி உள்ளார்.

முதல்வர் கூறியது இது தான்...
இந்தியா டுடே செய்தி சேனல் நிகழ்ச்சியில், "ஆட்சியில் பங்கு தமிழகத்திற்கு ஒத்துவராது என்பது எங்களுக்கும் தெரியும். அவர்களுக்கும் தெரியும். இடையில் சிலர் குழப்பம் ஏற்படுத்த திட்டமிட்டு சதி செய்கின்றனர். கூட்டணியில் ஏதாவது முறிவு ஏற்படுமா? என்பதற்காக சிலர் திட்டமிட்டு சதி செய்கின்றனர்" என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசி இருந்தார்.

Related Link
கூட்டணியை முறிக்க சிலர் சதி - முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

கூட்டணியை முறிக்க சிலர் சதி - முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கரூரை வட்டமடிக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை..!

3
5 hrs 36 mins agoshare
எ.வ.வேலு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau