Also Watch
Read this
By: Web Team

இந்தியாவுல நடக்குற சாலை விபத்துக்கள்ல, சுமார் 55 ஆயிரம் பேர், ஹெல்மெட்-ங்கிற தலைக்கவசம் அணியாததால, நொடியில உயிர விட்டுருக்காங்க...
வண்டி ஒட்டுறவரும், பின்னால உட்கார்ந்து வர்றவரும் ஹெல்மெட் போடணும், இல்லைன்னா அபராதம்ன்னு சொன்னதோட, அதிகபட்ச ஃபைன் வாங்கினாலும், வாகன ஓட்டிங்க கண்டுக்கிறதில்ல...
சாலைக்கு ரத்தத்த அபிஷேகம் செய்ஞ்சுட்டு, உயிரையும் விடுறவங்க எண்ணிக்க நாளுக்கு நாள் அதிகரிச்சிட்டே வருது...
என்ன சொன்னாலும், எப்படி சொன்னாலும் கேட்காதவங்களுக்காக, உத்தர பிரதேச மாநிலத்துல சாட்டய கையில எடுத்துருக்காங்க...
டூவீலர் வாகன விபத்தும், அதுல ஹெல்மெட் போடாததால உயிரிழப்பு அதிகமாறதாலும், இந்த நடவடிக்கைய அறிவிச்சிருக்காங்க...
அதாவது, உத்தர பிரதேச அரசு, விபத்துக்கள குறைக்குற வகையில், "No helmet No fuel"ன்னு சொல்லிட்டாங்க...

இதுமட்டுமில்ல, தரமில்லாத, போலியான ஹெல்மெட்டுகள கண்டறியவும் நடவடிக்கைய முடுக்கி விட்டுருக்காங்க...
அடிக்கடி இந்த மாதிரி, நடவடிக்கைய எடுத்தாலும், இந்த முறை செப்டம்பர் 1ம் தேதி முதல், 30ஆம் தேதி வரை விழிப்புணர்வு மாதமா அறிவிச்சிருக்காங்க... கடுமையான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டிருக்கு உத்தரபிரதேச அரசு...
ஏன்னா, மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்துல, ஆண்டுக்கு சுமாரா 26 ஆயிரம் பேர் விபத்துல உயிரிழக்குறாங்க... 28 லட்சம் பேருக்கு அபராதமும் விதிக்கப்படுது..
இதனால, ஹெல்மெட் இல்லைன்னா, பெட்ரோல் கிடையாதுங்கிற விழிப்புணர்வ, அனைத்து பெட்ரோல் நிலையங்கள்ல விளம்பரப்படுத்தவும், போக்குவரத்து அதிகாரிங்க, கண்ணுல விளக்கெண்ணய ஊத்தி கண்காணிக்கவும் உ.பி. அரசு உத்தரவிட்டிருக்கு...
ஹெல்மெட் இல்லன்னா, பெட்ரோல் கிடையாது... பெட்ரோல் இல்லன்ன நடராசா சர்வீஸ் தான்... கவனிங்க மக்களே...
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved