Also Watch
Read this
By: Web Team

அகில இந்திய ஹாக்கி போட்டி, சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.
வருகிற 20 ஆம் தேதி வரை நடைபெறும் போட்டியில் 10 அணிகள் பங்கேற்கின்றன. இப்போட்டியில் சிறப்பு அழைப்பின் பேரில் மலேசியா ஜூனியர் அணி பங்கேற்கிறது.
சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.7 லட்சமும், 2 ஆம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.5 லட்சமும், சிறந்த வீரர்களாக தேர்வு செய்யப்படுவோருக்கு ரூ.10 ஆயிரம் மதிப்பிலான சைக்கிளும் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மாலை நடைபெறும் முதல் போட்டியில் தமிழ்நாடு-மராட்டியம் அணிகளும், இரண்டாவது போட்டியில் கர்நாடகா-மத்திய நேரடி வரிகள் வாரியம் அணிகளும் மோதுகின்றன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved