Also Watch
Read this
By: Web Team

ஏ.ஆர்.ரகுமானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சிக்கு 10 ஆயிரம் ரூபாய்க்கு டிக்கெட் எடுத்தும் நிகழ்ச்சியை காண முடியாதவருக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என, நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கு சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஏ.ஆர்.ரகுமானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் கட்டணத்தை வட்டியுடன் திருப்பித் தர கோரி, சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறை தீர் ஆணையத்தில் அண்ணாநகரைச் சேர்ந்த அர்ஜுன் என்பவர் புகார் மனு அளித்தார்.
இதனை விசாரித்த ஆணையம், இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த ஏ.சி.டி.சி. நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved