Also Watch
Read this
By: Web Team

நெல்லை மாவட்டம் அம்பை அருகே காரையாரில் உள்ள சொரிமுத்து அய்யனார் கோயில் ஆடி மாத அமாவாசை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
அடர்ந்த வனப்பகுதிக்குள் அமைந்துள்ள அய்யனார் கோயிலில் குவிந்த பக்தர்கள் அருகில் உள்ள தாமிரபரணியாற்றில் புனித நீராடி பொங்கல் வைத்து வழிபட்டனர்.
இதனை தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்டு எழுந்தருளிய அய்யனார் சுவாமி முன்பு பூசாரிகள் நெஞ்சில் சங்கிலியால் அடித்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தியதையடுத்து,
ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved