Also Watch
Read this
அலங்கோலத்திற்கும், அவலத்திற்கும் எடுத்துக்காட்டாக ஒரு ஆட்சியை எடப்பாடி பழனிசாமி நடத்தியதாக கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டபுள் இஞ்சின், டப்பா இஞ்சின் என சொல்லி ரிமோட் கண்ட்ரோலுக்கு ஆடும் அடிமைகள் தமிழ்நாட்டை ஆளலாமா? என கேள்வி எழுப்பினர். மகளிர் இட ஒதுக்கீட்டிற்காக தொகுதி மறுவரையறை என மத்திய பாஜக அரசு கூறுவது பம்மாத்து வேலை என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆர்எஸ்எஸ் விரும்பும் ஒரே நாடு ஒரே அரசு என்பதை நிறைவேற்ற அரசியல் சட்டத்தை காலில் மிதித்து பாஜக அட்டூழியம் செய்வதாகவும் சாடினார்.

நாமக்கல் மாவட்டத்தில் மு.க.ஸ்டாலின்
நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது;
இன்றைக்கு நாட்டில் இவ்வளவு பிரச்சினை நடந்து கொண்டு இருக்கிறது. பழனிசாமி என்ன பேசியிருக்கிறார் என்றால், டீ-லிமிட்டேஷனால் தமிழ்நாட்டிற்கு ஆபத்து வராது என்று அமித்ஷா சொல்லியிருக்கிறார் என்று பேசியிருக்கிறார். தமிழ்நாட்டிற்குப் பாதிப்பு இருக்காது என அமித்ஷாவே சொல்லி விட்டார் என்று பழனிசாமி பேசுகிறார். ஒன்றிய அரசு சிறப்பாகச் செய்வார்கள் என்று பேசியிருக்கிறார்.

நாங்கள் என்ன கேட்டோம்?
அமித்ஷா எங்கே சொன்னார்? தேர்தல் பிரசாரத்தில். நாங்கள் என்ன கேட்டோம்? நாடாளுமன்றத்தில் வைத்துப் பிரதமர் வாக்குறுதி தர வேண்டும் என்று கேட்கிறோம். எங்களுக்குப் பேப்பரில், சட்டபூர்வமாக நாடாளுமன்றத்தில், உறுதிமொழி வேண்டும். 1971 மக்கள் தொகை அடிப்படையில்தான் அடுத்த 25 ஆண்டுகளுக்குத் தொகுதி அளவு இருக்கும் என்கிற உறுதிமொழி வேண்டும்.
வட்டமிடும் பருந்து
தமிழ்நாட்டை வட்டமிடும் பாஜக எனும் பருந்தை விரட்டியடிக்க வேண்டும். அ.தி.மு.க.வுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் பா.ஜ.வுக்கு விழும் வாக்குகள். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு விழும் தடைக்கற்கள். எனவே, தமிழ்நாட்டை வட்டமிடும் பாஜக எனும் பருந்தை விரட்டியடிக்க வேண்டும். டபுள் எஞ்சின், டப்பா எஞ்சின் என்று சொல்லிக் கொண்டு டெல்லியினுடைய ரிமோட் கண்ட்ரோலுக்கு ஆடும் அடிமைகள் தமிழ்நாட்டை ஆளக் கூடாது.

மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும்
தமிழ்நாட்டை நாசப்படுத்த நினைக்கும் ஆணவ பாஜகவும் அடிமை அ.தி.மு.க.வும் வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்தப்பட வேண்டும். அதற்கு திமுகதான் மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும்.
இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசி, வாக்கு சேகரித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved