Also Watch
Read this
By: Web Team

உலகின் 48வது ரத்தப் பிரிவு வகையா Gwada Negative என்றழைக்கப்படும் ரத்த வகை கண்டுபிடிக்கப்பட்டிருக்கு .மேலும் இது உலகில் ஒரே ஒரு பெண்ணுக்கு மட்டுமே இருப்பதாக அறியப்பட்டுள்ளது.
இந்த அரியவகை ரத்தப்பிரிவைக்கொண்ட பெண்மனி பிரான்ஸ் நிர்வாகத்தின் கீழ் இருக்கும் க்வாடலூப் (Guadeloupe) என்ற தீவை பூர்வீகமாக கொண்டதன் காரணமாகவே இந்த ரத்தப்பிரிவுக்கு 'க்வாட' நெகடிவ் என்றும் பெயரிடப்பட்ருக்கு.
இந்த ரத்தப்பிரிவை பிரான்ஸ் நாட்டின் தேசிய ரத்த முகமையான French Blood Establishment கண்டறிந்தப்பிறகு (International Society for Blood Transfusion) அங்கீகரித்து, PIG7 எனப்படும் உலகின் 48வது ரத்தப்பிரிவாக அடையாளப்படுத்தியிருக்கு.மேலும்,2025 ஜூன் மாதம் வரையில் உலகில் ஒரே ஒரு நபருக்கு மட்டுமே இந்த ரத்தவகை இருப்பதாக பதிவு செய்யப்பட்டுருக்கு.

2011-ம் ஆண்டில், 54 வயதான குவாடலூப்பை சேர்ந்த அந்த பெண், தனது அறுவை சிகிச்சைக்கு முன்பாக சில ரத்தப் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளார். அப்போது அவரது ரத்தத்தில் சில வித்தியாசங்கள் இருப்பதை பிரான்ஸ் நாட்டு மருத்துவர்கள் கவனிச்சிருக்காங்க.மேலும்,ஏற்கெனவே உள்ள எந்த ரத்த வகைகளுடனும் அவரது ரத்தம் பொருந்தல. அதுமட்டுமில்லாம அதனை கண்டறிவதற்கான நவீன தொழில்நுட்பங்களும் இல்லை.
பிரான்ஸ் தேசிய ரத்த முகமையை (EFS) சேர்ந்த ஆய்வாளர்கள் தியர்ரி பெய்ரார்ட் மற்றும் ஸ்லிம் அசௌசி உள்ளிடோர் கொண்ட குழு தொடர் ஆய்வுகள் நடத்தி 2019ம் ஆண்டில், மரபணு வரிசைப்படுத்துதலில் நவீன வழிமுறைகள் நடைமுறைக்கு வந்தது.அதிக எண்ணிக்கையிலான மரபணுக்களை மிக வேகமாக வரிசைப்படுத்தும் தொழில்நுட்பங்கள் உருவாகியிருந்தது.அதன் பின்னரே, புதிய ரத்த வகைக்கு காரணமான தனித்துவமான மரபணு திரிபினை கண்டறிய முடிந்ததாக ஆய்வாளர் தியரி பெய்ரார்ட் கூறியிருக்காரு.
அரிய ரத்த வகையால் ஏற்படும் சவால்கள் என்னென்ன என்பதப் பத்தி பார்க்கலாம். அரிய ரத்த வகை கொண்டவர்களுக்கு, அதே ரத்த வகையைத்தான் தானமாக பெற முடியும். ஒரு வேளை மாற்று ரத்தம் செலுத்தப்பட்டால், அவர்களிடம் இல்லாத ஆண்டிஜன் உடலுக்குள் சென்று அந்த ஆண்டிஜனை அவர்களின் உடல் ஏற்காது.

நுண் உயிரியலாளரான ஷண்முகப்பிரியா "ரத்த வகையை மாற்றி உள்ளே செலுத்துவது சில நேரங்களில் உயிருக்கே ஆபத்தாக மாறக்கூடும்னு தெரிவிச்சிருக்காங்க.மேலும், பாம்பே குரூப் எனும் அரிய ரத்த வகையில் எச் ஆண்டிஜன் (H antigen) இருக்காது. அந்த ஆண்டிஜன் நம்மில் கிட்டத்தட்ட எல்லோருக்கும் இருக்கும்.அதனால் , பாம்பே ரத்த வகை கொண்டவர்களுக்கு ரத்தம் செலுத்தும் போது கவனமாக இருக்கனும்.இது போன்ற அரிய வகை ரத்தம் கொண்டவர்களுக்கு தங்களுக்கு தாங்களே ரத்தம் செலுத்திக் கொள்ளும் முறை இருப்பதாக சொல்றாங்க.
அதாவது,தங்களுடைய ரத்தத்தை தாங்களே தானமாக அளித்து சேகரித்து வைத்துக் கொள்ளவும்,. ரத்தத்தின் வெவ்வேறு கூறுகளை தனித்தனியாக சேமித்து வைக்க முடியும்னு சொல்ராங்க.ரத்தத்தின் சில கூறுகளை ஓராண்டு காலம் வரை வைத்துக் கொள்ளவும்,ஆண்டிஜன்கள் இல்லாத பிளாஸ்மா போன்ற கூறுகளை எந்த கொடையாளரிடமிருந்தும் பெற்றுக் கொள்ள முடியும்" என்றும் சொல்றாங்க மருத்துவர்கள்.

அரிய வகை ரத்தம் கொண்ட கர்ப்பிணி பெண்களில் மாற்று ரத்தப்பிரிவு கொண்ட தங்கள் குழந்தையின் செல்களுக்கு எதிரான செல்களை தங்கள் உடல் உருவாக்கிவிடும் அபாயம் நிலவுகிறது.
அரிய வகை ரத்தம் கொண்ட கர்ப்பிணிகள் அதாவது,"O நெகடிவ் போன்ற ரத்தப்பிரிவு கொண்ட கர்ப்பிணிகளுக்கு, பேறு காலத்தின் இறுதிக் கட்டத்தில் சில ஆண்டிபாடிகள் வழங்கப்படும். வழக்கமாக ரத்த ஓட்டம் தாயிடமிருந்தே குழந்தைக்கு செல்வதாகவே இருக்கும். ஆனா,ஒரு வேளை குழந்தையிடமிருந்து தாய்க்கு ரத்தம் ஓட்டம் இருந்தால் அதனால் நேரும் விளைவுகளை தடுக்கவே இந்த ஆண்டிபாடிகள் வழங்கப்படும்." என்று மருத்துவர்கள் சொல்றாங்க.
இதனால அரிய வகை ரத்தப்பிரிவு கொண்ட அனைவருமே ரொம்பவே carefull ah தங்களுடைய உடம்ப பார்த்துக்கொள்ள வேண்டுமென்பதே மருத்துவர்களின் அறிவுரையாக இருக்கு.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved