news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news அடிமைத்தனத்தைப் பற்றி இபிஎஸ் பேசலாமா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி
tv

Also Watch

tv

Read this

அடிமைத்தனத்தைப் பற்றி இபிஎஸ் பேசலாமா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி

சென்னை

43

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Chief Minister Stalin

அடிமைத்தனத்தை பற்றி இபிஎஸ் பேசுவது வேடிக்கையாக உள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

சென்னையில் ஃபிடல் காஸ்ட்ரோவின் நூற்றாண்டு தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது;

அடிமைத்தனத்தைப் பற்றி எடப்பாடி பழனிசாமி பேசுவது வேடிக்கையாக உள்ளது. சமீபகாலமாக, கம்யூனிஸ்ட் கட்சிகள் மீது இபிஎஸ்-க்கு பாசம் வருகிறது. அடிமைத்தனத்தைப் பற்றி அவர் பேசலாமா?

என்னில் பாதியான செங்கொடி தோழர்கள் அழைத்து நான் வராமல் இருந்தது இல்லை. இங்கு யாரும், யாருக்கும் அடிமை இல்லை. கம்யூனிஸ்ட்டுகள் சுட்டிக் காட்டும் பிரச்சனைகளை நான் புறக்கணித்தது கிடையாது.

தோழமை சுட்டலுக்கும், அவதூறுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் எங்களுக்கு தெரியும். கம்யூனிஸ்ட் கட்சியுடனான நட்பு தேர்தலுக்கான நட்பு அல்ல; கொள்கை, கோட்பாடு, லட்சிய நட்பு. உடல்நலன் பாதிக்கப்பட்டு மருத்துவமனை செல்வதற்கு முன் தோழர்களை அறிவாலயத்தில் சந்தித்து பேசினேன்.

அமெரிக்கா கை வைக்கும்போதெல்லாம் கொட்டிவிடும் தேனீக்கள் தான் கியூபா.சோஷலிச கியூபாவை காப்போம்; ஏகாதிபத்திய சதிகளை முறியடிப்போம்.

இந்தியாவுக்கு அமெரிக்கா 50% வரி விதித்தது ஏகாதிபத்திய சதி. டிரம்ப் பேச்சு குறித்து பிரதமர் மோடி பதில் சொல்லாதது அவரது பலவீனத்தை காட்டுகிறது. அமெரிக்கா 50% வரி விதித்தது குறித்து ஒன்றிய பாஜக அரசு விளக்கம் தர வேண்டும்.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாலியை கழற்றி எறிந்து விட்டு இளம் பெண் கதறல்

0
17 mins agoshare
கிருஷ்ணகிரி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved