news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news இன்று கனமழைக்கு வாய்ப்பு, சென்னை வானிலை மையம் தகவல்
tv

Also Watch

இன்று கனமழைக்கு வாய்ப்பு, சென்னை வானிலை மையம் தகவல்

ஆறு மாவட்டங்களில்...

11

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு என்றும், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு பாதை...
இதுதொடர்பாக, சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவலில் கூறி இருப்பதாவது;
தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் இன்று ஜூலை 30ஆம் தேதி, நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

Related Link
பள்ளி மாணவர் மீது கொடூரத் தாக்குதல், சாதியை இழிவுபடுத்தினாரா தலைமை ஆசிரியர்?

பள்ளி மாணவர் மீது கொடூரத் தாக்குதல், சாதியை இழிவுபடுத்தினாரா தலைமை ஆசிரியர்?

தமிழகத்தின் பிற பகுதிகளில்...
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்

6 மாவட்டங்களில்...
தமிழ்நாட்டில் தேனி, கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய 6 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சென்னை மாநகராட்சியில் சொத்துவரி உயர்த்தப்பட்டதா?

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved