news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news பசு சாணம் டூ மில்லினியர்
tv

Also Watch

tv

Read this

பசு சாணம் டூ மில்லினியர்

மனம் திறந்த நடிகர்

29

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Jaideep

பசு சாணத்தை விற்று, பணம் சம்பாதித்ததாக பிரபல நடிகர் கூறி உள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகர் ஜெய்தீப், ‘கிராமத்தில் பசு சாணத்தை விற்று தான் சம்பாதத்தேன்’ என்று கூறியது, வைரல் ஆகி உள்ளது.

’நர்மீன்’ என்ற குறும் படத்தின் மூலம் அறிமுகமாகி, ஆக்ரோஷ் என்ற படத்தில் நடித்து, ஒட்டுமொத்த பாலிவுட் சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்தவர் நடிகர் ஜெய்தீப் அலாவத்.
பொதுவாகவே பாலிவுட்டில் நெப்போட்டிசம் அதிகமாக இருக்கும் என்றும் கூறுவதை கேள்விப் பட்டிருப்போம்.
ஆனால், 1000 நெப்போகிட்ஸ் வந்தாலும் பரவாயில்லை என்று, தன்னோட இயல்பான, எதார்த்தமான நடிப்பு மூலம் ரசிகர்களை தன் வசம் இழுத்தவர்.

இந்நிலையில், சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி தான் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

என்ன கூறி இருக்கிறார் ஜெய்தீப்...

"வாழ்க்கை எவ்வளவு தூரம் என்னை கொண்டு வந்திருக்கிறது என்று, சில நேரங்களில் நான் யோசிப்பேன். நான் என் கிராமத்தில் இருந்த நாட்கள் மிகவும் அழகாக இருந்தது.
குடும்ப வறுமையினால், சிறு வயதில், பசு சாணத்தை எடுத்து விற்று தான் நான் சம்பாதித்தேன். ஆனால், இப்போது உலகம் முழுக்க பயணிக்க வாழ்க்கை எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்துள்ளது.

கிராம வாழ்க்கைக்கும் மும்பை வாழ்க்கைக்கும் நிறையவே வித்தியாசம். ஒரு ஜோடி செருப்பு வாங்க கூட பணம் இல்லாமல் இருந்த நான், இப்போது ஒரே வருடத்தில், ரூ.20 கோடி மதிப்புள்ள ரெண்டு இடங்களை வாங்கி இருக்கிறேனர். நினைத்தாலே, பிரமிப்பாக இருக்கிறது.

இது மட்டுமல்ல, நான் எனது, கனவு இல்லத்தை மும்பையில் வாங்கி இருக்கிறேன். அடுத்த முறை இதை விட பெரிய வீடு வாங்க ஆசைப் படுகிறேன். இருப்பதை வைத்து, எப்போதுமே சந்தோஷமாக வாழ்வது இல்லை, இது மனிதனின் இயல்பு தானே...

இவ்வாறு மனம் திறந்துள்ளார் ஜெய்தீப்.

இவரது வாழ்க்கை பயணத்தை கேட்ட இணையவாசிகள், ஜெய்தீப் அனைவருக்கும் ஒரு நல்ல இன்ஸ்பிரேஷன் என்றும் விடாமுயற்சி, உழைப்பு இருந்தால் நமது முன்னேற்றத்தை யாராலும் தடுக்க முடியாது என்று பதிவிட்டு வருகின்றனர்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

3
13 hrs 16 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved