Also Watch
Read this
By: Web Team

இந்திய சினிமாவில், கடந்த 10 ஆண்டுகளாக அதிகம் தேடப்பட்டு வந்த நபராக ஒரு நடிகை இருந்து வருகிறார்.
டிஜிட்டல் வளர்ச்சியால், சோஷியல் மீடியாவில், நடிகர், நடிகைகள் ஆக்டிவாக இருந்து வருகின்றனர். இவர்களை, ஃபாலோ செய்வது, படம் ரிலீசானால், அது தொடர்பாக கருத்து வெளியிடுவது, பர்த்டே வாழ்த்து என்று, எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரசிகர்களும் அதிகரித்தே வருகின்றனர். சில நடிகர்களை மட்டுமே அதிகமாக இணையத்தில், ரசிகர்கள் தேடி உள்ளனர்.

இந்த வரிசையில், கடந்த 10 ஆண்டில், அதிகமாக இணையத்தில் தேடப்பட்ட நடிகர்கள் பட்டியலில், ஷாருக்கான், சல்மான் கான், விஜய், பிரபாஸ் இருந்தாலும், இவர்களை எல்லாம், “ஓரம் போங்க” என்று சொல்லும் வகையில், நடிகை தீபிகா படுகோனே முதலிடத்தை பிடித்துள்ளார்.

அடுத்ததாக ஷாருக்கான், ஐஸ்வர்யா ராய், ஆலியாபட், அமீர்கான், சல்மான்கான், ஹிருத்திக் ரோஷன், உள்ளனர்.

இந்த பட்டியலில், சமந்தா 13ஆவது இடத்திலும், தமன்னா 16ஆவது இடத்திலும், நயன்தாரா 18ஆவது இடத்திலும், தனுஷ் 30ஆவது இடத்திலும் உள்ளனர்.