Also Watch
Read this
By: Web Team

தங்கத்தை காட்டிலும், விலை உயர்ந்த வைரத்துக்கு எப்பவுமே மவுசு அதிகம். அப்படிப்பட்ட வைரத்தை ஒரு முறையாவது அணிந்திட மாட்டோமோ என்று ஏங்குவோர் அதிகம் பேர். இப்படி விலை உயர்ந்த மற்றும் செல்வாக்கை காட்டும் வைரத்தை அதிகளவில் வெட்டி எடுக்கும் நாடு எது?
உலகின் மதிப்புமிக்க பொருளாக இருக்கும் வைரம் செல்வாக்கு, கௌரவம் மற்றும் அன்பை வெளிப்படுத்தும் அடையாளமாக பார்க்கப்படுகிறது. பூமியில் இருந்து கிடைக்கும் அரிதான பொருட்களில் வைரமும் ஒன்று.
ரத்தின கற்களில் ஒன்றான வைரம் மின்னணுவியல், விண்வெளி, எரிவாயு மற்றும் ஆபரணம் சார்ந்த தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படுகிறது. வைர நகைகளை அணிவது சிலருக்கு கௌரவமாக பார்க்கப்படும் நிலையில், உலகில் இருக்கும் பாதி வைரம் ஆப்பிரிக்க நாடுகளில் வெட்டி எடுப்பதாக கூறப்படுகிறது.
ஆனால், ஆப்பிரிக்க நாடுகளை காட்டிலும், அதிகளவில் வைரம் கிடைக்கும் நாடு ரஷ்யா தான். உலகளவில் மொத்தமாக உற்பத்தி செய்யப்படும் வைரங்களில் 37 சதவீதம் ரஷ்யாவில் இருந்து எடுக்கப்படுகின்றன. வைர உற்பத்தியின் கிங் மேக்கராக இருக்கும் ரஷ்யா வைர வியாபாரத்திலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

ரஷ்யாவின் சைபீரியாவில் உள்ள அய்கல் வைர சுரங்கம் 40.7 மில்லியன் கேரட் வைரங்களை கொண்டிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இங்கு மட்டும் 1.3 மில்லியன் வைரங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால், வைரத்தை அதிகளவில் அறுவடை செய்யும் நாடுகளில் ரஷ்யா எப்போதும் முதலிடத்தில் உள்ளது.
ரஷ்யாவை தொடர்ந்து, போட்ஸ்வானா தரமான வைரத்தை உற்பத்தி செய்கிறது. அடுத்ததாக, கனடாவில் உள்ள சுரங்கங்களில் இருந்தும் விலை உயர்ந்த வைரங்கள் வெட்டி எடுக்கப்படுகின்றன. இந்த வரிசையில், காங்கோவும் வைர உற்பத்தியில் முன்னிலை வகிக்கிறது.

அனுமதி இல்லாத வைர சுரங்கங்களால் சட்டவிரோதமாக வைரங்கள் வெட்டி எடுக்கப்பட்டு கடத்தப்படுவதால் காங்கோ ஒரு ஆபத்தான பகுதியாகவே பார்க்கப்படுகிறது. இந்த வரிசையில் தென்னாப்பிரிக்காவும் வைரத்தை உற்பத்தி செய்யும் முக்கிய நாடாக உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved