Also Watch
Read this
By: Web Team

நாமக்கல் மாவட்டத்தில் கிட்னி திருட்டு குறித்த செய்தி வெளிவந்து ஐந்து நாட்களாகியும், திமுக அரசு மெத்தனப் போக்கில் செயல்படுவதில் இருந்தே, இந்த குற்றத்தில் திமுக புள்ளிகளுக்கு உள்ள தொடர்பை உறுதிப்படுத்துவதாக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழத்தில் பாலியல் குற்றங்கள், கொலை, கொள்ளை என பெரும் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் திமுகவினராக இருப்பதாக தெரிவித்துள்ள அவர், திமுக அரசு தங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் காப்பாற்றி விடும் என்ற நம்பிக்கையே, அவர்கள் இத்தனை தைரியமாக குற்றச் செயல்களில் ஈடுபட காரணம் என கண்டனம் தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved