news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் இபிஎஸ் ஆலோசனை
tv

Also Watch

tv

Read this

உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் இபிஎஸ் ஆலோசனை

டில்லி

71

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
eps file

டில்லி சென்றுள்ள அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார்.
விமானம் மூலம், இன்று, இபிஎஸ் டில்லி சென்றார். அவருடன் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி ஆகியோரும் சென்றனர். விமான நிலையத்தில் தம்பிதுரை, இன்பதுரை, சி.வி.சண்முகம் உள்ளிட்ட எம்பிக்கள் அவரை வரவேற்றனர். இன்று காலையில், குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை, இபிஎஸ் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.


இந்நிலையில், இன்று இரவு டில்லியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இபிஎஸ் சந்தித்து பேசினார். அவருடன் கே.பி.முனுசாமி, வேலுமணி, தம்பிதுரை, சி.வி.சண்முகம் ஆகியோரும் அமித்ஷாவை சந்தித்தனர். அதன் பிறகு, நிர்வாகிகள் வெளியேறிய நிலையில், அமித்ஷா உடன் இபிஎஸ் தனியாக ஆலோசனை நடத்தி உள்ளார்.
தமிழகத்தில் அதிமுக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

மேலும், கூட்​ட​ணியை வலுப்​படுத்​து​வது, கூட்​டணி கட்​சிகள் இணைந்து மக்​களை சந்​திப்​பது, இதர கட்​சிகளை கூட்​ட​ணிக்கு இழுப்​பது, தமிழகத்​தின் தற்​போதைய அரசி​யல் நில​வரம், விஜய் கட்​சிக்கு உள்ள மக்​கள் ஆதரவு உள்​ளிட்​டவை குறித்​தும் பேசியிருப்பதாக தெரிகிறது.


"முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக ஆட்சியை பாஜக தான் காப்பாற்றியது" என, இபிஎஸ் கூறியிருந்த நிலையில், இந்த சந்திப்பு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளதாக, அதிமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது.

உள்துறை அமைச்சர் அமித்ஷா இல்லத்தில் நடந்த இந்த ஒரு மணி நேர சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

இதையும் பாருங்கள்: ஒரு மணி நேரம் பேச்சு, என்ன பேசினார் இபிஎஸ்? | Edappadi Palanisamy meets Amithshah

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கரூரை வட்டமடிக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை..!

3
2 hrs 59 mins agoshare
எ.வ.வேலு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau