news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news மக்களை ஏமாற்றி பெற்ற போலி வெற்றி நிலைக்காது - உதயநிதி விமர்சனம்
tv

Also Watch

tv

Read this

மக்களை ஏமாற்றி பெற்ற போலி வெற்றி நிலைக்காது - உதயநிதி விமர்சனம்

Sofa Model ஆட்சியில் நடந்த சாதனைகளா?

11

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

நிதி ஆயோக் கூட்டத்திலோ அல்லது கூட்டணிக் கட்சியிடமோ மேகதாது பிரச்சினை பற்றி முதலமைச்சர் விஜய் வாய் திறக்கவில்லை என உதயநிதி சாடி உள்ளார்.

நிதி ஆயோக் கூட்டத்தில்...
இதுகுறித்து, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறி இருப்பதாவது;
சட்டசபைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, தமிழ்நாடு ஏதோ படுகுழிக்குள் விழுந்தது போலவும், கடனில் தத்தளிப்பதாகவும் புனையப்பட்ட கதைகளை (Fake Narratives set) கூறிய இன்றைய முதலமைச்சர், டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில், தமிழ்நாட்டின் சாதனைகள் என்று பெரும் பட்டியலை வாசித்து இருக்கிறார். இந்தியாவிலேயே 2ஆவது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு உள்ளது, இந்தியாவில் பணிக்குச் செல்லும் பெண்களில் 42 சதவீத மகளிர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள், பெண் கல்வி, பாதுகாப்பு, சுகாதாரம் போன்றவற்றில் முன்னேற்றம், மகளிர் சுய உதவி குழுக்களின் வளர்ச்சி என்று முதலமைச்சர் பேசி உள்ளார்.

யார் செய்த சாதனை?
இவை அனைத்தும் அவருடைய ஒரு மாத கால ஷோபா மாடல் ஆட்சியில் நடந்த சாதனைகளா? அல்லது 5 ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளா? என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும்.

நீட் தேர்வு விவகாரத்தில்...
தேர்தலுக்கு முன்பு 'நீட் மட்டும் தான் உலகமா?' என்று கேட்டவர், இப்போது நீட் விலக்கு கேட்டு, அவர் பேசியதற்கு அவரே மறுப்பு கூறி உள்ளார். டெல்லி வரை சென்றவர், நிதி ஆயோக் கூட்டத்திலோ அல்லது கர்நாடகாவில் ஆட்சி செய்யும் அவருடைய புதிய கூட்டணிக் கட்சியிடமோ மேகதாது பிரச்சினை பற்றி வாய் திறக்காமல் நமக்கு எதற்கு வம்பு? என்று அமைதியாக திரும்பி உள்ளார்.

உண்மை வெல்லும்
மொத்தத்தில், நிதி ஆயோக் கூட்டத்தில் நம் திமுக அரசின் சாதனைகளின் மீது முழுக்க முழுக்க ஸ்டிக்கர் ஒட்டியிருக்கிறது ஷோபா மாடல் அரசு. பொய்களையும், அவதூறுகளையும் அள்ளி வீசி மக்களை ஏமாற்றி, நீங்கள் பெற்றிருக்கும் போலி வெற்றி நீண்ட நாள் நிலைக்காது சி.எம். சார், உண்மை நிச்சயம் வெல்லும்.
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறி உள்ளார்.


Related Link
குறுவை சிறப்புத் தொகுப்பு ஏமாற்று வேலை - இபிஎஸ் விமர்சனம்

குறுவை சிறப்புத் தொகுப்பு ஏமாற்று வேலை - இபிஎஸ் விமர்சனம்

              


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானைகள்

0
27 mins agoshare
காட்டு யானைகள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved